இந்திய சினிமாவிலே இது தான் முதல்முறை ! இயக்குனர் ஹலிதாவின் புதிய முயற்சி..
இயக்குனர் ஹலிதாவின் புதிய முயற்சி
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஹலிதா ஷமீம்.
இவர் பூவரசம் பீப்பீ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது.
அப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹலிதா அதனை தொடர்ந்து ஏலே என்ற படத்தையும் இயக்கியிருந்தார், அப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனிடையே இயக்குனர் ஹலிதா இந்திய சினிமாவில் எவரும் செய்திராத புதிய விஷயத்தை தனது திரைப்படத்திற்காக செய்திருக்கிறார்.
ஆம், அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்மினி என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஆறு வருடத்திற்கு முன் முடித்துள்ளார். அப்போது அப்படத்தில் சிறுவர்களாக இரண்டு பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது 6 வருடங்கள் கழித்து மின்மினி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்கவுள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள ஹலிதாவிற்கு அனைவரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
6 years ago wrapped the first schedule. The next schedule is from next month... #Minmini pic.twitter.com/wlkScebwGb
— Halitha (@halithashameem) May 10, 2022
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் ! அவருக்காக நடிகர் சூர்யா செய்த விஷயம்..