ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! போட்டோவுடன் இதோ.. டிசம்பர் 4ம் தேதி திருமணம்
ஹன்சிகாவின் வருங்கால கணவர் பற்றிய முழு விவரம் வெளியாகி இருக்கிறது.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார், அதற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது என கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியானது. அது பற்றி ஹன்சிகா எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை, அந்த செய்தியை மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 4ம் தேதி அவரது திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. அவரது வருங்கால கணவர் பற்றிய விவரமும் வெளிவந்து இருக்கிறது.
மாப்பிள்ளை இவர்தான்
ஹன்சிகா அவரது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை ஹன்சிகா விரைவில முறையாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.