ஹன்சிகா இவரை தான் திருமணம் செய்கிறாரா.. காதல் திருமணமா?
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தற்போது தான் மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் மஹா படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் படம், இயக்குனர் ஆர் கண்ணனின் அடுத்த படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ஹாரர் காமெடி படம் கடந்த வாரம் தான் பூஜை உடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
மாப்பிள்ளை யார்?
ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் கோட்டையில் ராயல் திருமணம் நடைபெறுகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கிறார். இது முழுக்க முழுக்க arranged மேரேஜ் தான் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹன்சிகாவுக்கு அவரது அம்மா தான் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் இந்த திருமணம் பற்றி ஹன்சிகா அல்லது அவரது அம்மா இதுவரை எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.
இண்டஸ்ட்ரி ஹிட்டான மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா