ஹார்மோன் ஊசி பற்றி முதல்முறையாக வாய்திறந்த ஹன்சிகா! அவங்களுக்கு பொறாமை..
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா இந்தி சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர். வளர்ந்தபிறகு தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
அவர் மிக வேகமாக வளர்ந்தது எப்படி, அவரது அம்மா ஹார்மோன் ஊசி போட்டிருப்பார் என ஆரம்பத்தில் ஹன்சிகா பற்றி பல கிசுகிசுக்கள் வந்தது.

ஹார்மோன் ஊசி போட்டேனா?
இந்நிலையில் ஒரு ஹிந்தி youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ஹன்சிகா இந்த விஷயம் பற்றி பேசி இருக்கிறார்.
எனக்கு ஊசி என்றாலே பயம். அதனால் தான் டாட்டூ கூட நான் போட்டுக்கொள்ளவில்லை. அம்மா எப்படி அப்படி செய்வார். என்னை பார்த்து அவர்களுக்கு பொறாமை என்பது மட்டும் தெரிகிறது. அவர்கள் பேசும் அளவுக்கு நான் எதோ செய்துகொண்டிருக்கிறேன்.
"அவர்கள் பேசுவதை பற்றி எனக்கு கொஞ்சமும் கவலை இல்லை" என ஹன்சிகா கூறி இருக்கிறார்.

தீபிகா படுகோன் இல்லை.. STR 48 பட ஹீரோயின் இவர்தானாம்! லேட்டஸ்ட் தகவல்