தீபிகா படுகோன் இல்லை.. STR 48 பட ஹீரோயின் இவர்தானாம்! லேட்டஸ்ட் தகவல்
STR 48
சிம்பு நடிப்பில் வரும் படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆபிசில் வசூல் அள்ளிவரும் நிலையில் அடுத்து அவர் நடிக்க இருக்கும் STR 48 படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறதாம்.
ஹீரோயின் யார்
STR 48 படத்தில் ஹீரோயின் யார் என கடந்த சில தினங்களாக பல நடிகைகளின் பெயர்கள்வந்து கொண்டிருக்கிறது. ஹிந்தி நடிகை தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் சிம்பு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என உறுதிபடுத்தாத தகவல் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனை இரண்டாம் ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக தான் அணுகி இருக்கிறார்களாம். அந்த ரோலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது தீபிகா அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு பதிலாக வேறு நடிகையையும் படக்குழு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
சிம்பு தற்போது லண்டலின் இந்த படத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார். அந்த ஒரு மாத பயிற்சி முடிந்து சிம்பு திரும்பிய பிறகு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தான் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
விஜய்க்கு 200 கோடி சம்பளமா.. உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்