அசுர வேகத்தில் வசூலை குவித்த ஹனுமான் திரைப்படம்!! ரியல் பொங்கல் வின்னர் இந்த படம் தான்..
ஹனுமான்
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ஹனுமான் திரைப்படம் நேற்று (12-ம் தேதி) வெளியானது.
இதில் அம்ரிதா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இப்படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் எனப் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
வசூல்
பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த ஆதிபுருஷ் படத்தை காட்டிலும் ஹனுமான் திரைப்படத்தின் VFX காட்சிகள் அருமையாக இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹனுமான் படத்தின் வசூல் விவரம் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதில் இப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.