நல்ல வசூல் வேட்டை நடத்திய ஹரிஷ் கல்யாணின் டீசல் OTT ரிலீஸ் எப்போது?... வெளிவந்த விவரம்
ஹரிஷ் கல்யாண்
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் டீசல்.
கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இப்படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடிக்க வினய், கருணாஸ், விவேக் பிரசன்னா, கேபிஒய் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானதாக கூறப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஓடிடி ரிலீஸ்
ரசிகர்களின் பேராதரவில் நல்ல வசூல் வேட்டை செய்துள்ள இப்படம் நாளை நவம்பர் 21, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.