டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மார்ச் 8 முதல் 'ஹார்ட் பீட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!!

By Dhiviyarajan Feb 11, 2024 12:16 PM GMT
Report

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்த அசத்தல் அறிவிப்பை, மிக சுவாரஸ்யமான ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும்.

ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்குவதை, இந்த ப்ரோமோ வீடியோ காட்டுகிறது.

ரீனா இந்த நான்கு உலகங்களையும் ஒவ்வொன்றாக விளக்குகிறாள், அதில் இறுதி உலகம் அவளுடைய காதல் வாழ்க்கையைப் பற்றியது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முந்தைய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்களான ‘மத்தகம்’ மற்றும் ‘லேபிள்’ சீரிஸ்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸுக்கு, ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார். இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

https://youtu.be/Kmr5LgtTIF4?si=88l-dpzcYdsJfA5M

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US