ரஜினியின் தோழியும் பிரபல நடிகையுமான ஹேமா சவுத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஹேமா சவுத்ரி
70, 80 களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹேமா சவுத்ரி. இவர் இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஹேமா சவுத்ரி சென்னை ஃபிலிம் சிட்டியில் படிக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வகுப்புத் தோழியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர சிகிச்சை
நடிகை ஹேமா சவுத்ரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது கிடைத்த தகவலின் படி ஹேமா சவுத்ரியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஹேமா சவுத்ரி விரைவில் ககுணமடைய வேண்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.