சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன் செய்த விஷயம் இதுதான்- முதன்முறையாக கூறிய ஹேமந்த்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சித்ரா.
தன்னை மிகவும் தைரியமான பெண்ணாக திரையில் காட்டிவந்த இவர் இப்படி ஒரு காரியம் செய்வார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
அவரை இப்போதும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து சித்ராவை பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
ஹேமந்த் சொன்ன அதிரடி விஷயங்கள்
நடிகை சித்ராவை திருமணம் செய்துகொண்ட ஹேமந்த் இத்தனை வருடம் இல்லாமல் இப்போது அவரது தற்கொலை குறித்து பேசி வருகிறார்.
காரணம் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் சில உண்மைகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக தன்னை சிலர் மிரட்டுகிறார்கள், எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் என ஹேமந்த் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
பின் அவர், சித்ரா மரணத்திற்கு நான் காரணம் என்கின்றனர், ஆனால் அவரது தற்கொலைக்கு பின்னால் வேறு விஷயம் இருக்கிறது, அதை வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்றால் நான் சில உண்மைகளை வெளியே கூறுவேன் என தெரிவித்திருக்கிறார்.
சித்ரா இறந்த அன்று இரவு ஷுட்டிங் முடித்துவிட்டு அறைக்கு வரும்போது அவர் கொஞ்சம் மன கவலையுடன் தான் இருந்தார், என்ன காரணம் என எனக்கு தெரியும். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் என சமாதானப்படுத்தி ஹோட்டல் ரூம் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போதும் அவர் கொஞ்சம் வருத்தமாகவே காணப்பட்டார். ரூம் செல்வதும் வெளியே வந்து உட்கார்வதும் என இருந்தார். பின் நான் குளிக்க செல்கிறேன் என அவர் கூறி ஹோட்டல் அறை மூடிக் கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வராததால் நான் அழைத்து பார்த்தேன் சத்தம் இல்லை. எனவே ஹோட்டலில் இருக்கும் இன்னொரு சாவியை கேட்டு நானும் ஹோட்டலில் பணிபுரிபவர் ஒருவரும் அறைக்கு சென்றோம், அவர் தான் கதவை திறந்தார்.
அவர் திடீரென அறை திறந்து பார்த்து கத்த நான் பின்னாடியே சென்று பார்த்தால் சித்ரா அந்த நிலையில் இருந்தார்.
ஒன்றும் புரியாமல் அவரை கீழே இறக்கி முதல் உதவி செய்தோம் ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டது என கூறியிருக்கிறார்.
நடிகை ரோஜாவின் பிரம்மாணட வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவர் கட்டியுள்ள புதிய வீடு

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
