திடீரென காணாமல் போன நடிகை ராஷ்மிகா! என்ன காரணம் தெரியுமா?
ராஷ்மிகா
ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஆன நடிகை. நேஷ்னல் கிரஷ் என அவரை ரசிகர்கள் குறிப்பிடுவதும் உண்டு. அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகாவுக்கு தற்போது 38 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர் விரைவில் 4 கோடியை தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ராஷ்மிகா நடிப்பில் மிஷன் மஜ்னு என்ற ஹிந்தி படம் திரைக்கு வந்தது. அடுத்து புஷ்பா 2, ரெயின்போ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் அவர்.
காணாமல் போனது ஏன்?
சமீபத்தில் சில வாரங்களாக ராஷ்மிகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை. அது ஏன் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் அது பற்றி ரஷ்மிகா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"ரெயின்போ படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் செல்போன் டவர் இல்லாத பல இடங்களில் நடைபெற்று இருக்கிறது. அதனால் தான் நான் காணாமல் போய்விட்டேன்" என கூறி இருக்கிறார்.
ரெயின்போ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
புஷ்பா இந்த தமிழ் படத்தின் காப்பியா?