அஜித், விஜய் இல்லை.. சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் யார் தெரியுமா
சினிமாவில் ஒரு படத்தில் நடித்து விட்டு அந்த படம் வெற்றி அடைவதன் மூலம் ஒரு நடிகர் நிலைத்திருப்பதில்லை. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுப்பதன் மூலம் தான் ரசிகர்களின் மனதை வென்று முன்னணி நடிகராக வலம் வர முடியும்.
அவ்வாறு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை விஜய், ரஜினி, அஜித், கமல், ஷாருக்கான், பிரபாஸ், அமிதாப் பச்சன் போன்று மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர்கள் பலர் உள்ளனர்.
அதிக ஹிட் படங்கள்
ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் அதிக ஹிட் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் வலம் வந்த நடிகர் யார் தெரியுமா. வேறுயாருமில்லை, 1950 - ல் மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த பிரேம் நசீர் என்பவர் தான்.
ஒரு ஆண்டில் மட்டும் 39 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோவும் இவர் தான். இவர் நடித்த 700 படங்களில் 400க்கும் மேற்பட்ட படங்கள் ஹிட் அடித்துள்ளது.

நெப்போலியன் மகன் தனுஷ், மருமகள் அக்ஷ்யா திருமணத்திற்கு பின் எங்கு சென்றுள்ளனர் பாருங்க.. வைரல் வீடியோ
இவருக்கு பின், இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். இவர் 80 ஹிட் படங்களையும் 12 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.
இதேபோல் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் 60 ஹிட் படங்களையும் 10 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
