தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ
வசூல்
இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும் டார்கெட் போல் செட் செய்து விட்டு, அதற்கான பான் இந்தியன் படங்களை எடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த லோகா படம் இதுவரை ரூ. 191 கோடி வசூல் செய்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த Female Centric படமும் செய்யாத வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், அதிக வசூல் செய்த படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
டாப் 15 தென்னிந்திய படங்கள்:
- பாகுபலி 2 - ரூ. 1,810 கோடி
- புஷ்பா 2 - ரூ. 1,612 கோடி
- ஆர்.ஆர்.ஆர் - ரூ. 1,300 கோடி - ரூ. 1,387 கோடி
- கே.ஜி.எப் 2 - ரூ. 1,200 கோடி - ரூ. 1,250 கோடி
- கல்கி - ரூ. 1,042 கோடி - ரூ. 1,100 கோடி
- 2.0 - ரூ. 666 - ரூ. 800 கோடி
- சலார் - ரூ. 618 கோடி - ரூ. 700 கோடி
- பாகுபலி - ரூ. 599 கோடி - ரூ. 650 கோடி
- ஜெயிலர் - ரூ. 620 கோடி
- லியோ - ரூ. 595 கோடி - ரூ. 615 கோடி
- கூலி - ரூ. 515 கோடி
- பொன்னியின் செல்வன் - ரூ. 450 கோடி - ரூ. 500 கோடி
- விக்ரம் - ரூ. 424 கோடி - ரூ. 500 கோடி
- தி கோட் - ரூ. 440 கோடி - ரூ. 460 கோடி
- காந்தாரா - ரூ. 400 கோடி - ரூ. 450 கோடி
இந்த பட்டியலில் டாப் 15 படங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழில் இருந்து 2.0, ஜெயிலர், லியோ, கூலி, பொன்னியின் செல்வன், விக்ரம், தி கோட் என ஏழு திரைப்படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.