அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்.. முதல் இடத்தில யார் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக ஜொலித்து வரும் கதாநாயகிகள் வாங்கும் சம்பளம் குறித்து டாப் 10 லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யார்யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று வாங்க பார்க்கலாம்.
டாப் 10 லிஸ்ட்
1. நயன்தாரா
ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் கைவசம் தற்போது இறைவன், கனெக்ட், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்கள் உள்ளன.
2. சமந்தா
ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சமந்தா ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த யசோதா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3. திரிஷா
குந்தவையாக பொன்னியின் செல்வனில் நடித்து மக்கள் மனதில் நிறந்தரமான இடத்தை பிடித்துள்ள நடிகை திரிஷா ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
4. பூஜா ஹெக்டே
தொடர்ந்து சில படங்கள் தோல்வியை தழுவினாலும், மார்க்கெட்டை இழக்காமல் இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
5. காஜல் அகர்வால்
திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் தற்போது இந்தியன் 2வில் பிசியாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
6. கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். கீர்த்திக்கு விரைவில் திருமணம் ஆகப்போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
7. சாய் பல்லவி
கார்கி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த கம் பேக் கொடுத்த நடிகை சாய் பல்லவி ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
8. ஆண்ட்ரியா ஜெறேமியா
கதையின் நாயகியாக இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவருகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த அனல் மேலே பனித்துளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்ட்ரியா ஜெறேமியா ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
9. நித்யா மேனன்
திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை நித்யா மேனன் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. பிரியங்கா மோகன்
குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள பிரியங்கா மோகன் ரூ.1 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.