தனது ஹிட் படத்தின் 2ம் பாகத்தை இயக்க தயாரான ஹிப்ஹாப் ஆதி... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
ஹிப்ஹாப் ஆதி
ராப் பாடல்கள் பாடுவதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து மக்களின் மனதை வென்றவர் தான் ஹிப்ஹாப் ஆதி.
தனது பாடல்களுக்கு தானே வரிகள் எழுதி, தானே இசையமைத்து, தானே பாடி அசத்துவார்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் உருவாக்கிய ஜல்லிக்கட்டு தொடர்பான ஆல்பம் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் பங்கு வகித்தது.
ஆதி பாடகராக, இசையமைப்பாளராக, இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியல் என பன்முகம் காட்டினார்.
2ம் பாகம்
முதல் பாகம் ஹிட்டானால் 2ம் பாகம் வருவது இப்போது சகஜமாகிவிட்டது.
அப்படி ஹிப்ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு படம் செம ஹிட்டடிக்க 2ம் பாகம் தயாராக உள்ளதாம். ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடிக்கும் இப்படத்தை சுந்தர் மற்றும் ஹிப்ஹாப் ஆதி இணைந்து தயாரிக்கிறார்களாம்.
சில தினங்களுக்கு முன் இந்த 2ம் பாகத்தில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது.