ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்
மூக்குத்தி அம்மன்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.
வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
மேலும், இப்படத்தில் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதிரடி பதில்
அதில், "மூக்குத்தி அம்மன் 2 அரண்மனை 4 போல் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்கள் அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு இசையமைப்பது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு, அப்படியா! எனக்கே அது தெரியாது" என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.