பாக்ஸ் ஆபிஸில் வேட்டையாடும் ஹிட் 3.. மூன்று நாட்களில் செய்த வசூல் இதோ
ஹிட் 3
நானி நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெறுகிறது.
தசரா, hi நானா, சரிபோதா சனிவாரம் ஆகிய படங்களை தொடர்ந்து வெளிவந்த படம் தான் ஹிட் 3. திரில்லர் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வெற்றியை பெற்றுள்ளது.
இப்படத்தை இயக்குநர் சைலேஷ் கோணலு இயக்கியிருந்தார். முதல் முறையாக நானி உடன் இணைந்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்திருந்தார். ஹிட் 3 திரைப்படம் மூன்று நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 82 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.