அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் ஹாலிவுட் இயக்குனர்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்து வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என தகவல் வெளிவந்தது.
ஆனால், தற்போது அவர் இப்படத்தில் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக நடிகை தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என அஜித் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அஜித் போலவே இருக்கும் இயக்குனர்
உலகில் ஒருவரை போல் 7 பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்ற விஷயத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அது அஜித் விஷயத்தில் ஏற்கனவே நாம் பார்த்தோம். பிரபல மாடல் ஒருவர் அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் புகைப்படம் வெளியானது.
அதை தொடர்ந்து தற்போது அனைவரையும் ஷாக் கொடுக்கும் விதமாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் Stanley Kubrick அச்சு அசல் பார்ப்பதற்கு அஜித் போலவே இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் Stanley Kubrick, '2001: A Space Odyssey, The Shining, A Clockwork Orange போன்ற பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவாலா பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட பாக்கியா அவரது மகள் இனியா.. வைரலாகும் வீடியோ

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
