இன்று பிறந்தநாளை கொண்டாடும் தொகுப்பாளினி மணிமேகலை சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
மணிமேகலை
தொகுப்பாளினி மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
ஆனால், கடந்த குக் வித் கோமாளி சீசனில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக திடீரென விஜய் டிவியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை.
தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 33 - வது பிறந்தநாளை மணிமேகலை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இதுவரை யூடியூப் மற்றும் தொகுப்பாளினியாக பணியாற்றி சுமார். ரூ 7 கோடி சொத்தை மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசைன் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.