சூரி கதாநாயகனா, பலமுறை யோசித்துள்ளேன்.. இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்
சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி. தற்போது, சூரி பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் மே 16-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
மாரி செல்வராஜ்
இந்நிலையில், அந்த விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " சூரி போன்று ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவை. வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்க கூடிய, மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக ஆவார்கள் என்று நான் பலமுறை யோசித்துள்ளேன்.
எனக்கும் சூரி அண்ணனுக்கும் எமோஷனலான ஒரு கான்டக்ட் இருக்கிறது. இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தது போன்ற ஒரு உணர்வு உள்ளது.
யாருமே நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு கதையை எடுத்துக்கொண்டு சூரியிடம் சென்றால் கண்டிப்பாக அவர் நடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை பலருக்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
