ரஜினியின் முத்து படத்தில் நாயகியாக நடிக்க இத்தனை நாயகிகள் மிஸ் செய்துள்ளார்களா?.. வருந்தும் முக்கிய நடிகை
முத்து படம்
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது முத்து.
1995ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியுடன், மீனா, ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடித்தனர்.
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான தென்மாவின் கொம்பேத் படத்தின் ரீமேக் தான் முத்து.
இப்படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை குறித்த சொல்லவே வேண்டாம், பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
நடிகை
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார், மீனாவிற்கு ஒரு சில நடிகைகளிடம் கேட்டுள்ளார். அதில் ஒருவர் தான் நடிகை சுகன்யா, ஆனால் நடிகைக்கு இப்படியொரு வாய்ப்பு வந்ததே தெரியாதது தான் வருத்தம்.
ஒருமுறை விமான நிலையத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சுகன்யா பேச முயன்றபோது அவர் என்னிடம் பேசாதீர்கள் என கூறியுள்ளார். சுகன்யா என்ன ஆனது என கேட்க, என் படத்தில் நடிக்க மாட்றீங்க என்றிருக்கிறார்.
அதற்கு சுகன்யா என்ன படம் என கேட்ட, முத்து படம் என ரவிக்குமார் கூற இந்த படமா, இப்படம் தொடர்பான எனக்க எந்த ஒரு போனும் வரலில்லை. வந்திருந்தார் கண்டிப்பாக இந்த படத்தில் நடித்திருப்பேன் என கூறியிருக்கிறார்.
அதேபோல் நடிகை மதுவந்திக்கும் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள், அந்த நேரத்தில் அவர் மிஸ் செய்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
