விஜய் சேதுபதிக்கு ஜவான் பட வாய்ப்பு இப்படித்தான் கிடைத்ததா?
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் படுபிஸியான நடிகர். அவர் மற்ற மொழி படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை என்பதால் தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன புஷ்பா படத்தில் இருந்து அவர் விலகினார்.
அந்த அளவுக்கு பிஸியான நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதி ஹிந்தியில் ஷாருக் கான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆனது எப்படி என செய்தி வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா கல்யாணத்தில் பேச்சு வார்த்தை
நடிகர் ஷாருக் கான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருந்தார். அந்த திருமணத்தில் விஜய் சேதுபதி, அட்லீ ஆகியோரும் கலந்துகொண்டனர். விஜய் சேதுபதி ஷாருக் உடன் இருக்கும் போட்டோ அப்போதே வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில் ஷாருக் உடன் பேசும்போது விஜய் சேதுபதி தான் அவருக்கு வில்லனாக நடிக்க விரும்புவதாக கூறி இருக்கிறார். அவருக்கும் அந்த ஐடியா பிடித்ததால் அதன் பின் அட்லீ மூலமாக விஜய் சேதுபதியை வில்லனாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு? அவரது சோகமான பதிவு