ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் மகன்.. வைரலாகும் புகைப்படம்
ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வார் 2 படம் உருவாகவுள்ளது.
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2000ம் ஆண்டு சூசன் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
14 இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த நிலையில், 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் தற்போது சபா அஸாத் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஹ்ரித்திக் ரோஷன் வாழ்ந்து வருகிறார்.
ஹ்ரித்திக் ரோஷன் மகன்
இந்த நிலையில், ஹ்ரித்திக் ரோஷனின் இளைய மகனான ஹ்ரிதான் ரோஷனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் பார்க்க ஹாலிவுட் நடிகர் timothee chalamet போலவே இருக்கிறார் என கூறி வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..
Gen next - Hridaan at #TheRoshans success bash!
— HrithikRules.com (@HrithikRules) February 17, 2025
🌟🌟🌟🌟🌟 pic.twitter.com/5ZrGk21CjP