நானும் பாதிக்கப்பட்டேன், எதிரியை கூட இப்படி பண்ணாதீங்க: வனிதா விஜயகுமார் உருக்கம்
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் அவ்வப்போது செய்யும் விஷயங்கள் பரபரப்பும் ஏற்படுத்துவதுண்டு.
BB அல்டிமேட்டில் இருந்து வெளியேற்றம்
சமீபத்தில் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். எதிர்பார்த்தது போலவே அவர் பரபரப்பான பல சண்டைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டார். இருப்பினும் அவர் தனது mental health பாதிக்கப்படுவதாக கூறி ஷோவில் தொடர முடியாது என சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.
வன்முறையால் பாதிக்கப்பட்டேன்
நேற்று ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பேசும்போது நடிகர் வில் ஸ்மித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தது சர்ச்சை ஆனது. ஆனால் அதற்கு பிறகு வில் ஸ்மித் தான் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் வனிதா வில் ஸ்மித்தின் பதிவை ஷேர் செய்து 'வன்முறை' பற்றி இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.
"மக்கள் வன்முறையை சின்ன விஷயமாக எண்ணுகிறார்கள். வன்முறை எந்த விதத்தில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். யாரையும் physical ஆக வன்முறை செய்யாதீர்கள்.. உங்களது மோசமான எதிரியை கூட" என வனிதா தெரிவித்து இருக்கிறார்.
ராஜமௌலி மீது கடும் அதிருப்தியில் ஆலியா பட்! வெளிப்படையாக காட்டியதால் சினிமா துறையினர் அதிர்ச்சி