நான் சாகவில்லை.. பேட்டியில் எமோஷ்னலாக கண்ணீர் விட்ட சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா கடந்த மூன்று மாதங்களாக myositis என்ற autoimmune நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அந்த நேரத்திலும் கையில் ட்ரிப்ஸ் உடன் யசோதா படத்திற்கு டப்பிங் பேசி இருக்கிறார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் தன் உடல்நிலை பற்றி இன்ஸ்டா பதிவு போட்டது ரசிகர்களை அதிகம் வருத்தமடைய வைத்தது.
இந்நிலையில் தற்போது சமந்தா யசோதா பட ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டிஅளித்திருக்கிறார். அதில் தன் உடல்நிலை பற்றி வரும் வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
நான் சாகவில்லை..
"என் உடல்நிலை பற்றி மீடியாவில் பல articleகள் வருகிறது. Live threatening என தொடர்ந்து சொல்கிறார்கள், அது பற்றி விளக்கமளிக்க விரும்புகிறேன். நான் சாகவில்லை. I am not dying anytime soon. எனக்கு கடினமாக நிலை இருந்தாலும், நான் போராடி மீண்டு வருவேன்" என சமந்தா கூறி இருக்கிறார்.
தெலுங்கில் சமந்தா அளித்த பேட்டியில் தன் உடல்நிலை பற்றி பேசி சமந்தா கண்ணீர் விட்டது ரசிகர்களை மேலும் கலக்கமடைய வைத்திருக்கிறது.
ரஜினியுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட வாரிசு நடிகர்.. படத்தில் இருந்து தூக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்