வீட்ல சேக்கல, காசு இல்லை, சாவதை தவிர வழி இல்லை.. கண்ணீருடன் கதறிய மீரா மிதுன்
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். சமூக வலைத்தளங்களில் அவர் சர்ச்சையான பல கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் அவர் பட்டியலினத்தவர்கள் பற்றி பேசியதற்காக கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார்.
அவரை மீண்டும் கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டு இருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது. இந்நிலையில் மீரா மிதுன் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி இருக்கிறார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி இருக்கிறார்.
சாவதை தவிர வழியில்லை
"என்னை வீட்டில் சேர்க்கவில்லை, எனக்கு வேலை இல்லை, காசு இல்லை, சாப்பாடு இல்லை, தங்க வீடு இல்லை, கோர்ட்டுக்கு சென்று வருவதற்கு கூட காசு இல்லை."
"இப்போது நான் தற்கொலை தான் செய்துகொள்ளவேண்டும் என்கிற நிலையில் இருக்கிறேன். இனிமேல் என்னை யாரும் எந்த சர்ச்சையிலும் சிக்க வைக்காதீர்கள். இப்படியே போனால் எனக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை" என கண்ணீருடன் கூறி இருக்கிறார் அவர்.
கேரளா, அந்திரா, கர்நாடகாவிலும் விக்ரம் படத்திற்கு கிடைத்த பிளாக் பஸ்டர் ஒப்பனிங்..