எனக்கு சிறுவயதில் இருந்தே அந்த பழக்கம் இருந்தது, பெற்றோர்களுக்கு தெரியாது... அனுபமா பரமேஸ்வரன் ஒபன் டாக்
அனுபமா பரமேஸ்வரன்
ஆல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட்.
இதில் நடித்த பலருக்கும் அவர்களது திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படி பிரேமம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் தான் அனுபமா பரமேஸ்வரன்.
அதன்பின் தமிழ் பக்கம் வந்தவர் கொடி, தள்ளி போகாதே, ரவுடி பாய்ஸ், சைரன், டிராகன் என தொடர்ந்து படங்கள் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளிலும் மாறி மாறி படங்கள் நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் Paradha என்ற தெலுங்கு படம் வெளியானது, ஆனால் சரியாக ஓடவில்லை.
சீக்ரெட்
அடுத்து அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் நடித்துள்ள கிஷ்கிந்தாபுரி என்ற படம் வெளியாகவுள்ளது.
இப்பட டிரைலரில் அனுபமா பேய் உருவத்தில் காட்டி இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில், ஹாரர் படங்கள் தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும், நான் சிறுவயதில் இருக்கும்போது ரகசியமாக பேய் படங்களை பார்ப்பேன். என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களைப் பார்ப்பேன், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன் என்றார்.

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
