குஷ்பூ வரலைனா நான் இந்த நடிகைக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன்: சுந்தர்.சி
சுந்தர் சி
இயக்குனராகவும் நடிகராகவும் பல வெற்றி படங்கள் கொடுத்தவர் சுந்தர்.சி. அவர் நடிகை குஷ்பூவை காதலித்து 2000ல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போதும் சுந்தர்.சி பிசியாக படங்கள் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் குஷ்பூ அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நடிகையை ப்ரொபோஸ் செய்திருப்பேன்
முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் சி, தனது வாழ்க்கையில் குஷ்பூ மட்டும் வரவில்லை என்றால் நிச்சயம் நடிகை சௌந்தர்யாவுக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன் என கூறி இருக்கிறார்.
மேலும் பேசிய அவர் "எனக்கு மிகவும் பிடித்த இரண்டு ஹீரோயின்களில் சௌந்தர்யாவும் ஒருவர். குஷ்பூ என்னுடைய வாழ்க்கையில் வராத பட்சத்தில் நான் செளந்தர்யாவிடம் ப்ரொபோஸ் செய்திருப்பேன். ரொம்ப நல்ல பெண் அவர். அப்படி ஒருவரை பார்ப்பதே அரிது" என சுந்தர்.சி கூறி இருக்கிறார்.
சாகுந்தலம் படுதோல்வி.. சமந்தாவின் கெரியர் முடிந்துவிட்டது: பிரபல தயாரிப்பாளர்