சாகுந்தலம் படுதோல்வி.. சமந்தாவின் கெரியர் முடிந்துவிட்டது: பிரபல தயாரிப்பாளர்
சமந்தா சமீப காலமாக தொடர்ந்து கடினமான பல விஷயங்களை சந்தித்து வருகிறார். விவாகரத்து மற்றும் அதனை தொடர்ந்து மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டது, மேலும் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் பல படங்களில் இருந்து விலகியது என பல விஷயங்கள் நடந்திருக்கிறது.
அதே நேரத்தில் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் சமந்தா நடித்த சாகுந்தலம் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் தற்போது வரை சுமார் 10 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறதாம். அதனால் 60 கோடியில் உருவான இந்த படம் தோல்வி தான் என தகவல் வந்திருக்கிறது.
கெரியர் முடிந்தது?
இந்நிலையில் சமந்தாவின் கெரியர் இதோடு முடிந்துவிட்டது என டோலிவுட் தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் கூறி இருக்கிறார். தற்போது வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து கொண்டிருக்கிறார் சமந்தா, அவரால் மீண்டும் ஸ்டார் ஆக முடியாது எனவும் கூறி இருக்கிறார்.
பேட்டிகளில் கண்ணீர் விட்டு படத்தை ஹிட் ஆக்க முயற்சிக்கிறார் சமந்தா என்றும் அந்த தயாரிப்பாளர் விமர்சித்து உள்ளார்.
தற்போது சமந்தாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
சூப்பர்ஸ்டாருடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த தனுஷ் - வைரல் போட்டோ

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
