இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை காம்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் காம்னா ஜெத்மாலினி. தமிழில் இவர் இதய திருடன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் மச்சக்காரன், ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடித்தார். இதன்பின் தமிழ் சினிமா பக்கமே இவர் தலைகாட்டவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு சுராஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட காம்னா ஜெத்மாலினி, 2015க்கு பின் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். 7ஆண்டுகள் கழித்து 2022ல் கன்னடத்தில் வெளிவந்த கருடா எனும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில், நடிகை காம்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், இதய திருடன் படத்தில் நடித்த நடிகையா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
