நடிகர் அஜித்தின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ
அஜித்
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் அஜித் இந்த ஆண்டு இரு திரைப்படங்களை கொடுத்தார்.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளிவந்த நிலையில், விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் ஆக மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்திருக்கிறார்.
ஆம், AK படத்தை ஆதிக் இயக்க ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பும் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் வீடு
நடிகர் அஜித்துக்கு சொந்தமாக சென்னை திருவான்மியூரில் வீடு ஒன்று உள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் வீட்டின் மதிப்பு ரூ. 35 முதல் ரூ. 40 கோடியாகும்.