மத்திய அரசை தாக்கிய கமல் ஹாசன்.. சர்ச்சையில் சிக்குமா பாடல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வருகிற 15ஆம் தேதி வெளியாகிறது.
First சிங்கிள்
அதற்கு முன் இப்படத்தின் First சிங்கிள் இன்று மாலை வெளியாகியுள்ளது. இந்த பாடலை கமல் ஹாசனே எழுதி பாடியுள்ளார்.

இந்த பாடலில் இடம்பெறும் ஒரு வாரியில் ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பலே என்று வருகிறது.
சர்ச்சையில் சிக்குமா
இந்நிலையில், ஒன்றிய அரசை தாக்கி தான், ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பலே எனும் வரியை எழுதியுள்ளார் கமல் ஹாசன் என்று தற்போதே சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்க துவங்கிவிட்டனர்.
இதனால், விக்ரம் படத்தின் முதல் பாடல் சர்ச்சையில் சிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..