யுவன் ஷங்கர் ராஜா பிறந்த போது நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்ட இளையராஜா!
யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.
தனது இசைக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள யுவனை அவரின் ரசிகர்கள் BGM கிங் என அழைப்பார்கள்.
சமீபத்தில் யுவன் இசையில் விருமன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் லத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து இவரின் இசையில் வெளியாக இருக்கிறது.
இளையராஜா
இந்நிலையில் தற்போது இளையராஜா அவரின் டிவிட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பிறந்த போது நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆழியாறு அணைக்கு இளையராஜா ரஜினி நடித்த ஜானி திரைப்படத்திற்காக இசையமைக்க சென்ற போது அவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அவரிடம் வந்து சொன்னதாகவும்.
அந்த சந்தோஷத்தில் அன்று கம்போஸ் செய்த பாட்டு தான் Senorita, I Love You பாடல் எனவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார் இளையராஜா.
கோப்ரா திரைவிமர்சனம்