இசை ஜாம்புவான் இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. அதுவும் இந்த தேதியா?
இளையராஜா
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக இருக்கும் இளையராஜா சமீபத்தில் லண்டனில் தனது valiant சிம்பெனியை அரங்கேற்றம் செய்தார்.
இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்று கொடுத்த இளையராஜாவுக்கு சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
அரசு முடிவு
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா விரைவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, வரும் ஜூன் 2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் சென்னையில் அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.