இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் First லுக்.. கமல் ஹாசனுடன் வந்த தனுஷ்!
இளையராஜா வாழ்க்கை வரலாறு
இந்திய சினிமாவின் மாபெரும் கலைஞர் இசைஞானி இளையராஜா. இவருடைய வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு இசை இளையராஜாவே அமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
துவக்க விழா
இன்று இப்படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த விழாவில் இளையராஜாவின் நண்பரும், நடிகருமான கமல் ஹாசன் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
Ulaganayagan, Isaiganani & Dhanush at the Launch of Ilaiyaraaj Biopic❤️#KamalHaasan #Ilaiyaraaja #Dhanush #Arunmatheswaran #Cineulagam pic.twitter.com/rRSACPtHTU
— Cineulagam (@cineulagam) March 20, 2024

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
