ரேடியோவை வித்து அம்மா கொடுத்த பணம்.. மனம் திறந்து பேசிய இளையராஜா
இளையராஜா
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். இவர் சமீபத்தில் லண்டனில் தனது முதல் valiant சிம்பெனியை அரங்கேற்றினார். இதற்காக உலகெங்கும் உள்ள தமிழக மக்களை அனைவரும் இளையராஜாவை பாராட்டி தீர்த்தனர். மேலும் விரைவில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மனம் திறந்து பேசிய இளையராஜா
இந்த நிலையில், இளையராஜா பேட்டி ஒன்றில் தனது தாய் குறித்து பேசிய விஷயம் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, "எங்க வீட்டில் பயன்படுத்திட்டு இருந்த ரேடியோவ வித்து எங்க அம்மா 400 ரூபாய் கொடுத்தாங்க. காசு கொடுத்துட்டு 'இந்த பணம் போதுமாப்பா'னு கேட்டாங்க. அந்த பணத்தை வச்சித்தான் நாங்க சென்னைக்கே வந்தோம். இப்போ இந்த நிலைமைக்கு முன்னேறி இருக்கோம். இசையை கத்துக்க தான் சென்னை வந்தோம், இசையை கற்று முன்னேறினோம்" என அவர் கூறியுள்ளார்.