இம்மார்ட்டல் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் மற்றும் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் இம்மார்ட்டல். இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 9 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இம்மார்ட்டல்
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க, லொள்ளு சபா மாறன், கதிர், டி.எம். கார்த்திக் ஸ்ரீனிவாசன், குமார் நட்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் சேர்ந்து கொண்டாடினார்கள். கதாநாயகன் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு பைக்கை தயாரிப்பாளர் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்
இம்மார்ட்டல் திரைப்படம் முதல் நாளிலிருந்து எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 9 நாட்களை கடந்துள்ள இம்மார்ட்டல் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 12 கோடி வசூலித்துள்ளது.

இதன்மூலம், ஹாப்பி ராஜ், யூத், விஸ்வநாத் & சன்ஸ், இருமுடி திரைப்படங்களுடன் சேர்ந்து இம்மார்ட்டல் திரைப்படமும் இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷுக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ளது.
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu