வெங்கடேஷ் பட், தாமுவை தொடர்ந்து குக் வித் கோமாளியில் இருந்து இவர்களும் வெளியேறினார்கள்- அதிகாரப்பூர்வ தகவல்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசன் வனிதா, இரண்டாவது சீசன் கனி, 3வது சீசன் ஸ்ருதிகா, 4வது சீசன் மைம் கோபி என வெற்றியாளராக தேர்வாகியுள்ளனர்.
பிக்பாஸ் 7வது சீசன் முடிந்த கையோடு இப்போது மக்கள் குக் வித் கோமாளி 5வது சீசனிற்காக தான் வெயிட்டிங். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குள் நிறைய ஷாக்கிங் தகவல்கள் ரசிகர்களுக்கு வருகிறது.
புதிய தகவல்
இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களுக்கும் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருந்து வந்தார்கள், நிகழ்ச்சியை கலகலப்பாகவும் கொண்டு சென்றார்கள்.
ஆனால் 5வது சீசனில் அவர்கள் இல்லையாம், இதனை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இந்த நிலையில் இதுவரை 4 சீசன்களை தயாரித்து வந்த Media Mason இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரிக்க போவதில்லை.
அதேபோல் Mr & Mrs சின்னத்திரையையும் இவர்கள் தயாரிக்க போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அடுத்தடுத்து குக் வித் கோமாளி ஒவ்வொருவராக வெளியேறுவது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
You May Like This Video

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
