குறைந்த வசூல்! பாக்ஸ் ஆபிசில் இந்தியன் 2 படத்தின் கலெக்ஷ்ன் எவ்வளவு தெரியுமா
இந்தியன் 2
கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை அப்படம் பெறவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெகன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
படத்தின் நீளம் காரணமாக சற்று பின்னடைவை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. மக்களின் கருத்தாக இது இருந்தபட்சத்தில், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, புதிய வெர்ஷன் ஆஃப் இந்தியன் 2 திரையிடப்பட்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் கடந்த 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் ரூ. 146 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாம்.
கலவையான விமர்சனங்களின் காரணமாக இப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
