இந்தியன் 2 படத்திற்கும் காப்பியடித்து தான் இசையமைத்துள்ளாரா அனிருத்.. வைரலாகும் வீடியோ
இந்தியன் 2
கடந்த 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் பல ஆண்டுகள் கழித்து எடுக்க துவங்கினார். சில பிரச்சனைகள் காரணமாக நின்றுபோன இந்தியன் 2 படப்பிடிப்பு, அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் விறுவிறுப்பாக துவங்கியது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, மறைந்த நடிகர் விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
நேற்று இந்தியன் 2 படத்திலிருந்து இந்தியன் தாத்தா சேனாபதியின் இன்ட்ரோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. இதில், கமல் ஹாசன் 'வணக்கம் இந்தியா, இந்தியன் Is Back' என கூறினார்.
இன்ட்ரோ வீடியோ
Youtubeல் பல லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளார் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவிற்கு இசையமைப்பாளர் அனிருத் சுவாரஸ்யமான பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார்.

Come Back Indian என பெயரிடப்படும் இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் சிலர் இந்த பாடல் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் கொலம்பஸ் கொலம்பஸ் பாடலை காப்பியடித்து போடப்பட்டது போல் இருக்கிறது என கூறி வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்க..
Piththalaatam bhava #AnirudhRavichander ??#ComeBackIndian ??♂️ pic.twitter.com/mhXqctoxVk
— ℕ????? (Imagine Bluetick here) (@AthamleVargeesu) November 3, 2023