இந்தியன் 2 படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
இந்தியன் 2
கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நாளை இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்துள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கதைக்களம்
இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் மற்றும் அநியாயங்களை கேள்விப்பட்டு ஹாங் ஹாங்கில் இருக்கும் 'சேனாபதி' கமல் ஹாசன் இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். அவருடைய வருகையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் இங்கு நடந்தது என்பதே படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

இந்தியன் முதல் பாகத்தை போலவே இந்தியன் 2ஆம் பாகத்திலும் லஞ்சம், ஊழல் மற்றும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஹீரோவாக சேனாபதி கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், இயக்குனர் ஷங்கரின் திரைக்கதை கண்டிப்பாக நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri