தள்ளிப்போன இந்தியன் 2 ரிலீஸ்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த பல வருடங்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் இந்தியன் 2. கொரோனா லாக்டவுன், ஷூட்டிங்கில் நடந்த விபத்து என பல காரணங்களால் படப்பிடிப்பு இடையில் நின்று இருந்தது. மேலும் லைகா - கமல் இடையே இருந்து பிரச்சனை காரணமாகவும் ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது.
தற்போது பணிகளை முடித்து படத்தை இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். ஜூன் மாதம் ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்போது ஜூலைக்கு தள்ளிப்போய் இருக்கிறது இந்தியன் 2.
ஜூலை 12ம் தேதி தான் இந்தியன் 2 திரைக்கு வர இருக்கிறது.
மேலும் வரும் மே 22ம் தேதி அனிருத் இசையில் முதல் சிங்கிள் வெளியாகும் என்றும் அறிவித்து இருக்கின்றனர்.