தமிழ்நாட்டில் மட்டும் இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இந்தியன் 2
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா தயாரித்திருந்தது.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர், ஜெகன், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதே போல் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து, மனோபாலா உள்ளிட்டோரையும் பார்க்க முடிந்தது.
மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பில் வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் இப்படத்தின் வசூலும் சற்று குறைய துவங்கியுள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இந்தியன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 9 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேல் இந்தியன் 2 வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
