26 வருடங்களுக்கு முன் வெளியான இந்தியன் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரங்கள்! இவ்வளவு பிரம்மாண்டமா?
இந்தியன்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.
தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியாவில் வெற்றியடைந்த திரைப்படமாக இந்தியன் திரைப்படம் மாறியது. வரலாறு காணாத வெற்றியடைந்த அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கிட்டதட்ட 26 வருடங்களுக்கு பின் உருவாக்க இருக்கின்றனர்.
அதன்படி ஏற்கனவே இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் விபத்து காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சில காலங்கள் கழித்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மாண்ட விளம்பரம்
இந்நிலையில் தற்போது கமலின் ரசிகர்கள் இந்தியன் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி இந்தியன் திரைப்படத்தின் முதல் விளம்பரப்படுத்தும் பணிக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களை பதிவிட்டுள்ளனர்.
மேலும் அப்போது இந்தியன் படத்தின் போஸ்டரை எல்லா நாளிதழ்-லிலும் ஒரு பக்கம் முழுவதுமாக வெளியிட்டுள்ளனர். படத்தின் பூஜையின் போது ஸ்டுடியோ மற்றும் நகரம் முழுக்க விளம்பரம் படுத்தியுள்ளனர்.
அதனை ஒப்பிடுகையில் லைக்கா நிறுவனம் பெரிய விஷயமாக எதுவும் செய்யவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



