இண்டஸ்ட்ரி ஹிட் லோகா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
லோகா
லோகா படம் 2025ஆம் ஆண்டில் மிகப்பெரிய அதிர்வலையை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மலையாள திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது.
இதற்குமுன் மோகன்லாலின் எம்புரான் படம் இண்டஸ்ட்ரி ஹிட் சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை விட அதிக வசூல் செய்து, முதலிடத்தை லோகா பிடித்துள்ளது.
லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகா 2 படத்தை சமீபத்தில் அறிவித்தனர். இப்படத்தில் டோவினோ தாமஸ் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இறுதி வசூல்
இந்நிலையில், இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ள கல்யாணி ப்ரியதர்ஷனின் லோகா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூல் என கூறுகின்றனர்.