சன் டிவி இனியா சீரியல் நடிகர்களின் நிஜ பெயர் என்ன தெரியுமா? முழு விவரம்
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் இனியா. அதில் ஆல்யா மானசா மற்றும் ரிஷி ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த வருடம் டிசம்பரில் இனியா சீரியல் ஒளிபரப்பை தொடங்கிய நிலையில் தற்போது ஒரு வருடத்தை நிறைவு செய்து இருக்கிறது.
இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களின் நிஜ பெயர் உள்ளிட்ட விவரங்களை தற்போது பார்க்கலாம்.
இனியா - ஆல்யா மானசா
இவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலமாக பாப்புலர் ஆனவர். தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியின் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
விக்ரம் - ரிஷி
நடிகர் ரிஷி சன் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது இனியா சீரியலில் நடிகராகவும் கலக்கி வருகிறார்.
நல்லசிவம் - எல்.ராஜா
ஹீரோவின் அப்பா, வில்லன் நல்லசிவம் ரோலில் நடித்து வருபவர் எல்.ராஜா. அவர் 80களில் ஏராளமான படங்கள் இயக்கிய பிரபல இயக்குனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கௌரி - பிரவீனா
நல்லசிவத்தின் மனைவி கௌரி ரோலில் நடித்து வருபவர் பிரவீனா. அவர் இதற்கு முன் ராஜா ராணி 2 தொடரில் மாமியாராக நடித்து இருந்தார். அந்த தொடரில் ஆல்யா மானசா தான் அவரது மருமகளாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.