சர்ச்சைக்குரிய இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடாதீங்க.. உளவுத்துறை எச்சரிக்கை
கேரளா ஸ்டோரி
Sudipto Sen இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேரளா ஸ்டோரி. இப்படத்தில் அடா ஷர்மா, சித்தி இதானி, யோகிதா பினானி, சோனியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இதன்பின், இப்படத்தின் மீது சர்ச்சையும், கடும் எதிர்ப்பும் எழுந்தது. கேரளா முதலமைச்சர் கூட இப்படத்திற்கு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
கடும் எதிர்ப்பு
கேரளாவில் இருக்கும் பெண்கள் மதம் மாறி தீவிரவாதத்தில் ஈடுபடுவது போல் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் தான் கேரளா மாநிலத்தில் இப்படத்திற்க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், வரும் மே 5ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தமிழகத்தை வெளியிட வேண்டாம் என உளவுத்துறை கூறியுள்ளது. அப்படி வெளியிட்டால் தமிழகத்தில் எதிர்ப்புகள் வரக்கூடும்.
எனவே இப்படத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan