வெற்றிநடைபோடும் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jul 18, 2022 04:50 AM GMT
Report

தமிழ் சினிமா கொரோனாவிற்கு பிறகு நல்ல நல்ல படங்களை கண்டு வருகிறது. முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலரது புதிய படங்கள் இந்த வருட பாதியில் வெளியாகிவிட்டன.

இதில் சில நடிகர்களின் படங்கள் செம சூப்பர் டூப்பர் ஹிட், சிலரது படங்கள் வந்த தேதி தெரியாமல் காணாமல் போனது.‘

விக்ரம், வலிமை, டான் படங்களை போல ஹிட் லிஸ்டில் அண்மையில் வெளியான யானை படமும் இடம்பெற்றுள்ளது.

இப்போது இந்த ஹிட் படங்களின் ஹிட் லிஸ்டில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படம் இடம்பெறும் என தெரிகிறது.

வெற்றிநடைபோடும் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா? | Iravin Nizhal Box Office

வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் கதைகள் எழுதி அதில் ஏதாவது புதுமையை புகுத்தி படம் இயக்க நினைக்கும் பார்த்திபன் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள படம் தான் இரவின் நிழல்.

கடந்த ஜுலை 15ம் தேதி இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

3 நாள் முடிவில் மட்டும் படம் ரூ. 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நடிகை சாய் பல்லவியின் கார்கி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US