சிங்கிள் ஷாட்டில் எடுத்த இரவின் நிழல் படத்தின் மொத்த வசூல்.. நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத தொகை
இரவின் நிழல்
பார்த்திபன் இயக்கி நடித்து கடந்த ஜூலை மாதம் வெளிவந்த திரைப்படம் இரவின் நிழல். உலகிலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் நாண் லீனியர் படம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், இப்படத்தின் இயக்குனர் பார்த்திபன், இப்படம் தான் முதல் சிங்கிள் ஷாட் நாண் லீனியர் படம் என தொடர்ந்து ஆணித்தனமாக கூறி வருகிறார்.
கமெர்ஷியல் படமாக இல்லாமல் ஆர்ட் ஃபார்மாக எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்களால் கொண்டாடினார்கள்.
வசூல் சாதனை
இந்நிலையில், இப்படம் ரூ. 15 கோடி வசூல் செய்ததாக இயக்குனர் பார்த்திபன் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஓடிடியில் இருந்து ரூ. 10 கோடிக்கும், திரையரங்கில் இருந்து ரூ. 4.5 கோடிக்கும் மேல் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முழுக்கமுழுக்க ஆர்ட் ஃபார்மில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நினைத்து கூட பார்க்க முடியாத வசூல் கிடைத்துள்ளது என்பது மாபெரும் சாதனை என்று கூறப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
