3வது திருமணத்திற்கு தயாரானாரா பிரபல நடிகர் அமீர்கான்... வைரலாகும் தகவல்
அமீர்கான்
பாலிவுட் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக உள்ளார்கள் 3 கான்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான் என இந்த 3 நடிகர்கள் பேச்சு இல்லாமல் பாலிவுட் சினிமா நிகழ்ச்சிகள் இல்லை என்று கூறலாம்.
அப்படி முக்கியமான நடிகராக வலம்வரும் அமீர்கான் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
திருமணம்
அமீர்கான் கடந்த 1986ம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஜுனைத் கான் என்ற மகனும், ஐரா என்ற மகளும் உள்ளனர். ஜுனைத் தற்போது சினிமாவில் நாயகனாக களறிமங்க, ஐராவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. தன்னுடைய மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்ய இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் இருக்கிறார். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் முடித்தது. கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்றவர் சிங்கிளாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவரை அமீர்கான் காதலித்து வருவதாகவும் விரையில் 3வது திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் பாலிவுட் வட்டாரங்களில் வலம் வருகிறது.